ADDED : நவ 08, 2024 10:55 PM
பெங்களூரு: வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவை அளவிட, புதிய மென்பொருளை கொண்டு வர, போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, போக்குவரத்து துறையின் கூடுதல் கமிஷனர் ஞானேந்திர குமார் கூறியதாவது:
வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவை அளவிட, தற்போதுள்ள 'வாஹன் - 4'ல், புகை பரிசோதனை விபரங்களை பதிவு செய்ய முடிவதில்லை.
எனவே புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது, அதிநவீன தொழில்நுட்பம் கொண்டதாகும். இதில், புகை பரிசோதனை சான்றிதழுடன் 'கியூஆர் கோடும்' இருக்கும்.
நாட்டின் எந்த மூலையில் இருந்தும், கியூ ஆர் ஸ்கேன் செய்தால், புகை பரிசோதனை உட்பட, அனைத்து விபரங்களும் தெரிய வரும். புதிய தொழில்நுட்பம் கொண்ட மென்பொருளை நிறுவ, 'டெக் கமர்ஷியல்' என்ற நிறுவனம் டெண்டர் பெற்றுள்ளது.
இந்நிறுவனம், புதிய தொழில்நுட்ப மென்பொருளை, புகை பரிசோதனை மையங்களில் பொருத்தும்.
இதை கையாள்வது குறித்து, புகை பரிசோதனை சென்டர்களின் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதை அமல்படுத்தினால், வாகனத்துக்கு எப்போது புகை பரிசோதனை செய்யப்பட்டது; அடுத்து எப்போது செய்ய வேண்டும்;
இன்ஜின் நிலை என்ன; வாகனத்துக்கு எத்தனை ஆண்டு ஆகிறது; வாகன உரிமையாளரின் தொலைபேசி எண் உட்பட அனைத்து விபரங்களும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.