
வக்ப் சொத்துகளை நிர்வகிக்க, 'உமீத்' என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதையும், அவர்களுக்கு சொந்தமான வக்ப் சொத்துகள் திறம்பட மற்றும் நியாயமாகப் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்யும்.
கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர், பா.ஜ.,
வேண்டுமென்றே பறிப்பு!
வெறுப்பு பேச்சு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியைச் சேர்ந்த அப்பாஸ் அன்சாரியின் எம்.எல்.ஏ., பதவி வேண்டுமென்றே பறிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பேச்சுகளால், எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்படும் என்றால், பா.ஜ.,வின் பல எம்.எல்.ஏ.,க்கள் பதவியை இழக்க நேரிடும்.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி
நாட்டுக்கு என்ன பயன்?
பிரதமர் மோடியின் தோல்விஅடைந்த வெளியுறவுக் கொள்கையால், உலகம் முழுதும் இந்தியா அவமதிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சென்ற அனைத்து கட்சி எம்.பி.,க்கள், உலக தலைவர்களில் யார் யாரை சந்தித்தனர்? இந்த பயணத்தால், நம் நாட்டுக்கு என்ன பயன்?
சுப்ரியா ஸ்ரீநாத், செய்தித் தொடர்பாளர், காங்.,