தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : செப் 15, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

‘கோப்ரா’ படைக்கு முதல்

பெண் ஐ.ஜி., நியமனம்

புதுடில்லி: சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முக்கிய அங்கமாக செயல்படும், ‘கோப்ரா’ பிரிவின் ஐ.ஜி.,யாக சஞ்சுக்தா பராசர், 46, நியமிக்கப்பட்டுள்ளார். அடர்ந்த காடுகளில் நடக்கும் கொரில்லா மற்றும் தீவிரவாத ஒழிப்புப் போர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த கோப்ரா படைப் பிரிவுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். வடகிழக்கு மாநிலங்களான அசாம் – மேகாலயா கேடரைச் சேர்ந்த இவர், 2006ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரி ஆனார். இந்நிலையில் கோப்ரா படைப் பிரிவின் ஐ.ஜி.,யாக இருந்த தானேஷ் ரானா, ஜம்மு – காஷ்மீர் பகுதிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, சஞ்சுக்தா பராசரை, அப்பொறுப்புக்கு மத்திய அரசு நியமித்துள்ளது. இதேபோல் சி.ஆர்.பி.எப்.,யின் வி.ஐ.பி., பாதுகாப்புப் பிரிவின் புதிய ஐ.ஜி.,யாக வி.கே.பிர்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

‘சுத்திகரிப்பு’ சடங்கு

செய்த ஏழு பேர் கைது

ஹைதராபாத்: தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவின் பண்ணை வீட்டுக்கு அருகே கடந்த 8ம் தேதி மஞ்சள் நீர் தெளித்து, சுத்திகரிப்பு சடங்கு நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இது, தலித் சமூகத்தினரை அவமதிக்கும் செயல் என குற்றஞ்சாட்டி காங்கிரசார் சமீபத்தில் போராட்டம் நடத்தியதுடன், போலீசில் புகார் அளித்தனர். இதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அவர்களில், ஏழு பேரை அண்டை மாநிலமான ஆந்திராவின் விஜயவாடாவில் நேற்று முன்தினம் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒடிஷா அரசு

நிராகரிப்பு

புவனேஸ்வர்: ஒடிஷாவின் கியோஞ்சர் மாவட்டத்தில், கடந்த 1999ம் ஆண்டு பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டெய்ன் என்பவர் தன் இரண்டு மகன்களான பிலிப் மற்றும் திமோதி ஆகியோர் அங்கிருந்த ஒரு வாகனத்தில் துாங்கினர். அப்போது, ஹிந்துத்துவ ஆர்வலர் தாரா சிங் என்பவர் உயிருடன் அவர்களை எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக புவனேஸ்வரில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால், பின்னர் அது, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதற்கிடையே, சிறையில் இருந்து விடுவிக்கக்கோரி தாரா சிங், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒடிஷா அரசை முடிவெடுக்கும்படி அறிவுறுத்தியது. இதை பரிசீலித்த மாநில அரசு, அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us