தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/செய்திகள் சில வரிகளில்: தேசியம்

செய்திகள் சில வரிகளில்: தேசியம்

செய்திகள் சில வரிகளில்: தேசியம்


UPDATED : அக் 11, 2026 09:39 PM

ADDED : அக் 11, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 09:39 PM ADDED : அக் 11, 2026 09:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ. 43 கோடி கடத்தல்

போதைபொருள் பறிமுதல்

குவஹாத்தி: நம் அண்டை நாடான மியான்மரில் இருந்து இரு லாரிகளில் போதை பொருள் கடத்தப்படுவதாக போதைபொருள் கட்டுப்பாட்டு அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் கடந்த 6ல் அதிகாரிகள் வாகன சோதனை செய்தபோது அங்கு வந்த இரு லாரிகளில் எரிபொருள் டேங்க்குகளில் பிரத்யேக அறை அமைத்து அதில், 43 கோடி ரூபாய் மதிப்புள்ள, 54 கிலோ எடையுள்ள மெத் ஆம்பெட்டமைன் என்ற போதை மாத்திரைகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜார்க்கண்ட் எக்கு ஆலையில்

விஷவாயு கசிந்து இருவர் பலி

ராஞ்சி: ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் வேதாந்தா இரும்பு எக்கு நிறுவனத்தின் துணை நிறுவனமான இ.எஸ்.எல்., எக்கு ஆலையில் நேற்று தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். திடீரென விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் பொகோராவின் ராம்கார் பகுதியைச் சேர்ந்த சோகன் மஹாதோ மற்றும் தன்பாத் மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் அன்சாரி ஆகிய இரு அதிகாரிகள் உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக போலீசாரும், ஆலைநிர்வாகமும் தனித்தனியாக விசாரிக்கின்றனர்.

திரிணமுல் எம்.எல்.ஏ.,

மீது தாக்குதல்

கொல்கட்டா : திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மேற்கு வங்க மாநிலம் பருய்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., பிபாஸ் சர்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஜோய்நகரில் உள்ள வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சிலர் தாக்கியுள்ளனர்.

இவரை பா.ஜ.,வினர் தாக்கியுள்ளதாக, திரிணமுல் காங்.,தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். இதை ஆளும் பா.ஜ., மறுத்துள்ளது.

ரூ. 9 கோடி தங்கம்

கடத்திய இருவர் கைது

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் காரில் வெளிநாட்டு தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 9ம் தேதி இரவில் விசாகபட்டினம் அருகே மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி அதிவேகமாக சென்ற காரை அதிகாரிகள் விரட்டி பிடித்தனர்.

அப்போது காரின் முன்பகுதியில் உள்ள இருக்கையின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5,833 கிராம் எடையுள்ள, 9 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us