உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஜூன் 17, 2016 03:18 AM
ADDED : ஜூன் 17, 2016 03:14 AM

அ நிறம் | அளவு
மும்பை : கடல்வழி பயங்கரவாதம் நாட்டுக்கே மிகப்பெரும் ஆபத்து என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கடலோர பாதுகாப்பு குறித்து மும்பையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: மும்பையில், 2008ல், கடல் வழியாக வந்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின், கடல் வழி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம். கடல் வழி பயங்கரவாதம், மிகப்பெரிய ஆபத்தாக உள்ளது; பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உலக நாடுகள், இந்த விஷயத்தில் கவனம் செலுத்துகின்றன; இந்தியாவும், கண்காணிப்பை பலப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
