குளச்சல் அருகே துறைமுகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்:ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி
குளச்சல் அருகே துறைமுகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்:ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி
UPDATED : ஜூலை 07, 2016 07:33 AM
ADDED : ஜூலை 05, 2016 11:51 PM

சர்வதேச நாடுகளுடன் போட்டியிடும் வகையில், குளச்சல் அருகே இனயத்தில், 25 ஆயிரம் கோடி ரூபாயில், வர்த்தக துறைமுகம் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
@Image@துறைமுகத்தை வரவிடாமல் தடுக்க, திட்டமிட்டு நடத்தப்பட்ட முயற்சிகளை பொருட்படுத் தாமல், மத்திய அரசு உறுதியாக முடிவு எடுத்துள்ளது, தொழில்துறையினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில், சென்னை, துாத்துக்குடி, எண்ணுார் என, மூன்று பெரிய துறைமுகங்கள் உள்ளன; இதில், சென்னை, துாத்துக்குடியில் மட்டுமே, சரக்குகள் கையாளப்படுகின்றன. இந்த மூன்று துறைமுகங்களிலும், அதிநவீன கப்பல்கள் வந்து செல்லும் வகையில், கட்டமைப்புக்கள் இல்லாததால், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகள், கொழும்பு, சிங்கப்பூர் துறைமுகங் களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தான் பிற நாடுகளுக்கு அனுப்ப முடியும். இறக்குமதியும் அவ்வாறே நடந்து வருகிறது.
இதுபோன்று அல்லாமல், 'சர்வதேச கப்பல் களும் நேரடியாக வந்து செல்லும், வகையில், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில், 21 ஆயிரம் கோடி ரூபாயில், வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ஆய்வுகள் நடந்தன. தொழில் நுட்ப ரீதியாக நடத்திய ஆய்வில், குளச்சல் அருகே உள்ள, இனயம் என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது.
மீனவ அமைப்புகள் எதிர்ப்பு: 'இந்த திட்டம் வந்தால், மீனவர்கள் இடம் பெயர வேண்டி வரும்; வாழ்வாதாரம் பாதிப்படையும்; 25 கி.மீ., தொலைவில், விழிச்சியம் வர்த்தக துறைமுகம் உள்ளபோது, அருகே இன்னொரு வர்த்தக துறைமுகம் தேவை இல்லை' என, பல மீனவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், கலெக்டரைச் சந்தித்து, 'இனயத்தில் துறைமுகத்தை அமைக்கக்கூடாது' என, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மத்திய
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ,
@nextcolumn@ 'நல்ல திட்டத்தை சிலர் வேண்டுமென்றே
எதிர்க்கின்றனர். வர்த்தக துறைமுகத்தை அந்த பகுதியில் அமைத்தே தீருவேன்.
இது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம். அமைக்க முடியாத சூழல் வந்தால்,
பதவியை ராஜினாமா செய்வேன்' என, ஆவேசமாக பேசி வந்தார்.
இந்நிலையில்,
குளச்சல் அருகே இனயத்தில், 25 ஆயிரம் கோடி ரூபாயில், வர்த்தக துறைமுகம்
அமைப்பதற்கும், முதற்கட்ட பணியை, 6,575 கோடி ரூபாயில் மேற்கொள்ளவும்,
மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. 21 ஆயிரம் கோடி என, முன்பு
திட்டமிடப்பட்டு, தற்போது, 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த
தகவலை, தகவல்,தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
தொழில்துறையினர் வரவேற்பு: இங்கு கப்பல் நிறுத்தும் தளம், கன்டெய்னர் முனையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, தனியார் நிறுவனங்கள், 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்கின்றன. 'இது சர்வதேச அளவிலான கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமையும். கிழக்கு - மேற்கு நாடுகளிடையேயான வணிக வழித்தடத்தில், முக்கிய முனையமாக அமையும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை துறைமுகத்தின் சேவை குறைந்து வரும் நிலையில், குளச்சல் வர்த்தக துறைமுகம் அமைய வேண்டுமென, தொழில்துறையினர் பெருமளவு எதிர்பார்த்தனர். துறைமுகத்தை வர விடாமல் தடுக்கும் பல கட்ட முயற்சிகளைப் பற்றி கவலைப்படாமல், மத்திய அரசு உறுதியாக இருந்து, வர்த்தக துறைமுகம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது, தொழில்துறையினரிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.
கொழும்பை முந்த முடியும்: குளச்சல் துறைமுகத்தின் சாத்தியக்கூறுகளை கண்டறிய, இரண்டு தனியார் நிறுவனங்கள் ஆய்வு நடத்தின. குளச்சல் கடற்கரையில் இருந்து, 2 கி.மீ., நீளத்துக்கு பாலம் அமைத்து, நடுக்கடலில், 900 ஏக்கர் பரப்பளவில், செயற்கை நிலத்திட்டையை உருவாக்கி, சிங்கப்பூர் தொழில்நுட்பம் போன்று, கப்பல்களை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கப்பல்கள், குளச்சல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு, மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்ரிக்காவுக்கும் சரக்குகளை கப்பலில் ஏற்றிச் செல்ல முடியும். இதன் மூலம் சர்வதேச அளவில் சரக்குகளைக் கையாளுவதில் முன்னணியில் உள்ளகொழும்புவை, இந்தியா முந்த அதிக வாய்ப்புள்ளது.
இயற்கையில் ஆழமானது: ஆசியாவிலேயே,
இயற்கையாக, 20 மீட்டர் ஆழத்துடன் உள்ளது, குளச்சல் துறைமுகம். மற்ற
இடங்களில், துறைமுகம் அமைக்க வேண்டுமானால், 14 அடிக்கு ஆழப்படுத்த, பல
ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும். உருவாக உள்ள குளச்சல் துறைமுகம்,
இயற்கையாகவே நல்ல ஆழத்தில் அமைந்துள்ளது. துாத்துக்குடி துறைமுகக் கடல் பகுதியை விட மிகவும் ஆழமானது. @nextcolumn@கடலில், 1 கி.மீ., துாரத்திலேயே, 15 மீட்டர் ஆழம் உள்ளது. அமைய உள்ள குளச்சல் துறைமுகம், சர்வதேச கப்பல் வழித் தடத்திற்கு மிகவும் அருகில் உள்ளதால், கப்பல்கள் எளிதாக வந்து செல்லும்.
'10 ஆயிரம் பேருக்குவேலை கிடைக்கும்': மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:குளச்சல் துறைமுகத்துக்கான திட்ட மதிப்பீடு, 25 ஆயிரம் கோடி ரூபாய் என, தற்போது அறிவிக்கப்பட்டாலும், பணிகள் துவங்கும்போது, அதன் மதிப்பீடு, 28 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும். இந்த திட்டத்தின் மூலம், 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். துவக்க விழாவை எப்போது நடத்துவது என்பது குறித்து, தமிழக முதல் வருக்கு கடிதம் எழுதவுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
மெட்ராஸ் ஐகோர்ட்; இனி சென்னை ஐகோர்ட்: பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கும் சேர்த்து, சென்னையில் மெட்ராஸ் ஐகோர்ட் செயல்பட்டு வந்தது. மாநில பிரிவினைக்குப் பின், மெட்ராஸ் ஐகோர்ட், தமிழகத்திற்கென செயல்பட்டது. மெட்ராஸ் என்ற பெயரை, சென்னையாக மாற்றி, 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும், மெட்ராஸ் ஐகோர்ட் என்றே அழைக்கப்பட்டு வந்தது.
மெட்ராஸ் ஐகோர்ட் என்ற பெயரை, சென்னை ஐகோர்ட் என மாற்றும்படி, மத்திய அரசுக்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை பரிசீலித்த மத்திய அரசு, சென்னை ஐகோர்ட் என மாற்றியமைக்க, நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல், பம்பாய் ஐகோர்ட், மும்பை ஐ கோர்ட் என, பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் நேற்று பேசுகையில், ''கல்கத்தா ஐகோர்ட், கோல்கட்டா ஐகோர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்,'' என, தெரிவித்தார். ஆனால், அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
