தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அகிலேஷ் ரத யாத்திரை துவக்கம் : முலாயம், சிவ்பால் பங்கேற்பு

அகிலேஷ் ரத யாத்திரை துவக்கம் : முலாயம், சிவ்பால் பங்கேற்பு

அகிலேஷ் ரத யாத்திரை துவக்கம் : முலாயம், சிவ்பால் பங்கேற்பு


ADDED : நவ 03, 2016 10:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2016 10:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: உ.பி.,யில், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட, முதல்வர் அகிலேஷ் யாதவின், பிரம்மாண்ட ரத யாத்திரை துவக்க விழாவில், கட்சி தலைவர் முலாயம் சிங்கும், அவரது சகோதரர் சிவ்பால் யாதவும் பங்கேற்று, ஒற்றுமையை உறுதிப்படுத்தினர்.

உ.பி.,யில், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன், அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. முலாயம் சிங்கின் தம்பி சிவ்பால் யாதவுக்கும், முதல்வர் அகிலேஷுக்கும் மோதல் நடந்து வருகிறது; முலாயம் சிங் யாதவ் தலையிட்டு, சமாதானம் செய்தார்; எனினும், கட்சியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, இருவரும் முயற்சித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சமாஜ்வாதியின் வெள்ளி விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை, பிரம்மாண்டமாக, சிவ்பால் யாதவ் செய்து வருகிறார். இதற்கு போட்டியாக, அகிலேஷ், நேற்று, பிரம்மாண்ட ரத யாத்திரையை துவக்கினார்; இந்நிகழ்ச்சியை, முலாயம் மற்றும் சிவ்பால் புறக்கணிப்பர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முலாயம் சிங் யாதவ் பங்கேற்று, கொடிஅசைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்; சிவ்பால் யாதவும் பங்கேற்றார்; இதில், அகிலேஷ் பேசியதாவது:தலைவர் முலாயம் சிங்கும், சிவ்பால் யாதவும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி; இதன் மூலம், கட்சியின் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளோம்; ஒன்றுபட்டு போராடுவோம்; தேர்தலில் வெற்றி பெறு வோம்; பா.ஜ.,வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே, சமாஜ்வாதியின் இலக்கு.இவ்வாறு அவர் பேசினார்.

அகிலேஷ் யாதவின் ரத யாத்திரை துவக்க விழாவை, சமாஜ்வாதியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் புறக்கணித்தனர். அகிலேஷின் மனைவி டிம்பிள் பங்கேற்றார்.

பழுதான ரதம் : அகிலேஷின் ரத யாத்திரை மேற்கொள்ளும் பஸ், ஐந்து கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது. உயர் தொழில்நுட்ப வசதி, எல்.இ.டி., திரை, குண்டு துளைக்காத கண்ணாடிகளுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் உள்ளேயே, முதல்வர் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ், புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே, எதிர்பாராதவிதமாக பழுதடைந்தது. பழுது பார்க்க தாமதமானதால், பொறுமை இழந்த அகிலேஷ் யாதவ், தன் அலுவலக காரில் ஏறி பயணத்தை தொடர்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us