தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/எம்.எல்.ஏ.,க்கள் கடத்தப்படுவதாக ராஜ்யசபாவில் காங்., கடும் அமளி

எம்.எல்.ஏ.,க்கள் கடத்தப்படுவதாக ராஜ்யசபாவில் காங்., கடும் அமளி

எம்.எல்.ஏ.,க்கள் கடத்தப்படுவதாக ராஜ்யசபாவில் காங்., கடும் அமளி


UPDATED : ஆக 02, 2017 08:29 AM

ADDED : ஜூலை 31, 2017 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2017 08:29 AM ADDED : ஜூலை 31, 2017 08:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: குஜராத்தில், காங்., - எம்.எல்.ஏ.,க்களை, போலீசார் கடத்துவதாகவும், ராஜ்யசபா, எம்.பி., பதவிக்கான தேர்தலில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, ஓட்டு போடும்படி மிரட்டுவதாகவும், ராஜ்யசபாவில் நேற்று, காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், சபை, சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

@Image@

குஜராத்தில், ராஜ்யசபா, எம்.பி.,க்கள் மூவரின் பதவிக்காலம் முடிவதை அடுத்து, ஆக., 8ல், தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், இரு இடங்களில் வெற்றி பெறுவதற்கு, போதிய, எம்.எல்.ஏ.,க்கள், ஆளும், பா.ஜ.,வுக்கு உள்ளனர். @nextcolumn@

காங்., உறுப்பினர்கள் கடும் அமளி




மூன்றாவது, எம்.பி., பதவிக்கு, காங்., தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர், அஹமது படேல் நிறுத்தப்பட்டு உள்ளார்.ஆனால், காங்கிரசைச் சேர்ந்த, ஆறு, எம்.எல். ஏ.,க்கள் கட்சியிலிருந்து விலகியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் மூவர், பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். மேலும் பலர், ராஜ்யசபா தேர்தலின் போது, அணி மாறி, பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பர் என, கூறப்படுகிறது.இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று, காங்., உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

குஜராத்தில், தங்கள் கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கடத்துவதாகவும், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கும்படி மிரட்டுவதாகவும், காங்., உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி கோஷம் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளியால், சிறிது நேரம், சபை ஒத்தி வைக்கப்பட்டது.

ரூ.15 கோடி பேரம்?


லோக்சபாவில் நேற்று, குஜராத் மாநில, காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு விலை பேசப்படுவதாக, @nextcolumn@காங்., - எம்.பி.,க்கள் குற்றஞ்சாட்டி அமளியில் ஈடுபட்டனர்.

காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''குஜராத் மாநில, காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, 10 - 15 கோடி ரூபாய் அளிப்பதாக, பா.ஜ.,வினர் பேரம் பேசி வருகின்றனர். அது குறித்து, லோக்சபாவில் விவாதிக்கப்பட வேண்டும்,'' என்றார்.

அவர் கோரிக்கையை நிராகரித்த, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ''அது, மாநில அரசு தொடர்பான விவகாரம்; அது பற்றி, லோக்சபாவில் விவாதிக்க முடியாது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us