தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பீஹாரில் 22 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு

பீஹாரில் 22 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு

பீஹாரில் 22 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு


ADDED : ஆக 02, 2017 03:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2017 03:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாட்னா: பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசில் உள்ள, 29 அமைச்சர்களில், 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 21 பேர் கோடீஸ்வரர்கள் என தெரிய வந்துள்ளது.

ஆய்வு அறிக்கை

வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசில், 29 அமைச்சர்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர். இதில், 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இத, 76 சதவீதம். முந்தைய ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கூட்டணி அரசில், 19 அமைச்சர்கள் மீது தான் கிரிமினல் வழக்குகள் இருந்தன. இது, 69 சதவீதம். புதிய அமைச்சர்களில் இரண்டு பேர் மீது மிக தீவிரமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏழு பேர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. பல அமைச்சர்கள் மீது, கொள்ளை, திருட்டு மோசடி, வன்முறை உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.



21 பேர் கோடீஸ்வரர்கள்

புதிய அரசில், 21 பேர் கோடீஸ்வர்கள்; இது, 72 சதவீதம், முந்தைய அரசில், 22 பேர் கோடீஸ்வரர்கள்; இது, 79 சதவீதம். புதிய அரசில் பணியாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் பா.ஜ., எம்.எல்.ஏ., விஜய்குமார் சின்காவிடம், 15.50 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் உள்ளளன. நகர மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் பா.ஜ., எம்.எல்.ஏ., சுரேஷ்குமாரிடம், 11 கோடி ரூபாய் சொத்து உள்ளது. நீர்வளம் மற்றும் திட்டத்துறை அமைச்சராக இருக்கும் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ., ராஜிவ் ரஞ்சன் சிங்கிடம், ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் உள்ளன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us