ADDED : ஆக 03, 2017 12:15 AM
கேரளாவில் நடக்கும் படுகொலை சம்பவங்கள், நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. சில மாதங்களில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும், பா.ஜ.,வைச் சேர்ந்த, 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமைதிப் பூங்காவாக திகழ்ந்த கேரளா, தற்போது கொலைக்காரர்களின் கூடாரமாக மாறியுள்ளது.
மீனாட்சி லேகி, லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
ராஜினாமா செய்ய வேண்டும்!
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜியின் உறவினர், அபிஷேக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து, முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் மம்தா, உடனடியாக, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
பிரகாஷ் ஜாவடேகர், மத்திய அமைச்சர், பா.ஜ.,
முழு வீச்சில் மீட்பு பணி!
கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வட கிழக்கு மாநிலங்களில், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள், போர்க்கால அடிப்படையில், முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும், முழு உதவி கிடைக்க, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
ஜே.பி.நட்டா, மத்திய சுகாதார அமைச்சர், பா.ஜ.,
