ADDED : ஆக 21, 2017 09:25 AM

புதுடில்லி : பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களின் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று கூட்டியுள்ளார்.
இக்கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவும் பங்கேற்க உள்ளார்.டில்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2019 லோக்சபா தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் 13 மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் வரும்காலத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து பிரதமர் மோடியும், கட்சித் தலைவர் அமித்ஷாவும் ஆலோசனை வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என்பது குறித்து மோடியும், அமித்ஷாவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தோல்வி பயம் காரணமாகவே பா.ஜ., இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
