‛நீட்' குறித்து மத்திய அரசு மீது குறை சொல்ல விரும்பவில்லை: தம்பிதுரை
‛நீட்' குறித்து மத்திய அரசு மீது குறை சொல்ல விரும்பவில்லை: தம்பிதுரை
ADDED : ஆக 22, 2017 04:35 PM

புதுடில்லி: டில்லியில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அளித்த பேட்டி: நீட்' தேர்வில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்பது கடமை. காங்கிரசும், திமுகவும் கொண்டு வந்த திட்டம் தான் நீட் தேர்வு. கூட்டாட்சி தத்துவப்படி உரிமையை பெற தமிழக அரசு போராடியது.
மசோதாவை நிறைவேற்றி தான் தர முடியும் வேறு என்ன செய்ய முடியும். அமைச்சர், அதிகாரிகள் டில்லியில் தங்கியிருந்து முயற்சி செய்தனர். முந்தைய அரசுகள் செய்த தவறை சரி செய்ய போராடுகிறோம் தவறு செய்துவிட்டு முந்தைய ஆட்சியாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துகின்றனர். தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தருவோம். ‛நீட்' விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்ல விரும்பவில்லை. தமிழக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முந்தைய அரசுகளே காரணம். அதிமுக அரசு காரணமல்ல. நீட் தேர்வில் தமிழகத்திற்க விலக்கு அளிக்க பிரதமர் முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் நீட் தேர்வுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்தார். காவிரி பிரச்னைக்கு காங்கிரசும் திமுகவும் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
