சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும்... தப்ப முடியாது!
சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும்... தப்ப முடியாது!
UPDATED : ஆக 29, 2017 08:13 AM
ADDED : ஆக 27, 2017 08:46 PM

புதுடில்லி: ''அரசியல், மதம் ஆகிய விஷயங் களில், எந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் வன்முறைகள் நடப்பதை ஏற்க முடியாது; சட்டத்தை கையில் எடுப்போர் கடுமையாக தண்டிக்கப்படுவர், ''என, பிரதமர், நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
@Image@பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், 'மன் கீ பாத்' என்ற பெயரில், ரேடியோ மூலம், உரை நிகழ்த்தி வருகிறார். இம்மாத நிகழ்ச்சி, நேற்று ஒலிபரப்பானது.தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவனான குர்மித் ராம் ரஹீம், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என,
நீதிமன்றம் அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, அவனது அமைப்பைச் சேர்ந்தவர்கள், பஞ்சாப், ஹரியானா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ரேடியோ உரையில், பிரதமர் மோடி பேசியதாவது:
புத்தர், காந்தி போன்றோர் பிறந்த நாடு இது. நாட்டை ஒருமைப்படுத்திய சர்தார் படேல் பிறந்த நாடு. ஆண்டாண்டுகளாக, வன்முறையை எதிர்ப்பது தான் நம் அடிப்படை யாக இருந்து வருகிறது.
நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறை நடப்பதை ஏற்க முடியாது என்று சுதந்திர தின உரையின்போது கூறினேன்; அந்த நம்பிக்கை என்பது, மத ரீதியாகவோ, அரசியல்
@nextcolumn@ ரீதியாகவோ, தனிநபருக்காகவோ அல்லது சில பாரம்பரியத்துக்காகவோ இருந்தாலும்,
அந்த நம்பிக்கைக்காக வன்முறையில் ஈடுபடுவடுவ தையோ, சட்டத்தை கையில்
எடுத்துக் கொள்வ தையோ ஏற்க முடியாது.
குறிப்பிட்ட நபரோ, அமைப்போ சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதை, எந்த நாடும், எந்தஅரசும் ஏற்காது. அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதற்கு நம் அரசியலமைப்பு சட்டம் தீர்வு அளிக்கிறது. சட்டத்தை கையில் எடுப்போர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; இதில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது.
துாய்மை இயக்கம்
துாய்மை இந்தியா திட்டம், வரும், அக்., 2ம் தேதியுடன், மூன்றாண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. நாட்டில், 2.30 லட்சம் கிராமங்கள், பொதுஇடத்தை அசுத்தம் செய்யாத கிராமங்களாக மாறியுள்ளன. மக்கள் தொகையில், 39 சதவீதம் பேருக்கு மட்டுமே கழிப்பறை இருந்த நிலை மாறி, தற்போது, 67 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மஹாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, வரும், செப்., 15 முதல், அக்., 2 வரை, நாடு முழுவதும் தீவிர துாய்மை சேவை நிகழ்ச்சிகள் நடத்தி, துாய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த சேவையில் அனைவரும் பங்கேற்கவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
30 கோடி பேர் வங்கி கணக்கில் 65 ஆயிரம் கோடி ரூபாய்
ரேடியோ
உரையில், பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:நாட்டில் உள்ள அனைத்து
மக்களுக் கும் வங்கிக் கணக்கு துவக்கும் ஜன்தன் திட்டம், 2014, ஆக., 28ல்
துவக்கப்பட்டது. மூன்றாண்டுகளை நிறைவுசெய்ய உள்ள நிலையில், நாடு முழுவதும், @nextcolumn@30 கோடி பேருக்கு, ஜன்தன் வங்கிக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்கு களில், 65 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு உள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பு அளிக்கும் இந்த திட்டத்தை, உலக நாடுகள் பாராட்டுகின்றன. ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவானான தயான் சந்த், ஒலிம்பிக்கில் மூன்று முறை, தங்கம் வாங்கி கொடுத்தவர். அவரது நினைவாக,தேசிய விளையாட்டு தினம், ஒவ்வொரு ஆண்டும், ஆக., 29ல் கொண்டாடுகிறோம்.
தற்போதைய மாணவர்கள், இளைஞர்கள், கம்ப்யூட்டரிலும், மொபைலிலும் விளையாடு வதை கைவிட்டு, மைதானத்தில் வியர்வை சிந்த விளையாட வேண்டும். இவ்வாறு விளையாடுவது, அவர்களது உடல் நலத்தை மேம்படுத்துவதுடன், மனநலத்தையும் மேம்படுத்தும்.
விளையாட்டு என்பது, அனை வரது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
