உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 22, 2017 05:30 AM

அ நிறம் | அளவு
லக்னோ: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எம்.பி., பதவியை ராஜிநாமா செய்தார்.
கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்ட யோகி ஆதித்யநாத் எம்.பி.,யாக தேர்வானார். பின் உ.பி.,யில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதல்வரானார். இதனையடுத்து எம்.எல்.சி., பதவிக்கு போட்டியிட்ட யோகி வெற்றி பெற்றார். இதனையடுத்து தனது எம்.பி., பதவியை யோகி ஆதித்யநாத் நேற்று ராஜிநாமா செய்தார். துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
