ADDED : செப் 25, 2017 12:12 AM

பண்டிகையை காரணமாக வைத்து, மேற்கு வங்க மக்களை, மத ரீதியாக பிரித்தாளும் சதியை அரங்கேற்ற, சில சக்திகள் துடிக்கின்றன. இந்த சக்திகள், வேறு மாநிலங்களில் இருந்து, ஊடுருவியுள்ளன; அவர்களின் சதியை முறியடித்து, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன்.
மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
ஒருங்கிணைய வேண்டும்!
இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலக நாடுகள் அனைத்துக்கும், பயங்கரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் விளங்குகிறது; இதை முறியடிக்க, உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதில், எந்தவித சமரசத்துக்கும் இடம் அளிக்கக் கூடாது.
எம்.ஜே.அக்பர், மத்திய அமைச்சர், பா.ஜ.,
ரொம்ப நன்றி!
இந்த நாட்டை, 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த, காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில், ஐ.ஐ.டி.,க்களையும், ஐ.ஐ.எம்.,களையும் உருவாக்கியதாக, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ், ஐ.நா., பொதுச்
சபையில் பேசியுள்ளார். காங்கிரசின் தொலைநோக்கு பார்வையை அங்கீகரித்ததற்கு நன்றி.
ராகுல், துணை தலைவர், காங்கிரஸ்
