வாரிசு அரசியல் காங்.,கின் கலாச்சாரம்: ராகுலுக்கு அமித்ஷா பதிலடி
வாரிசு அரசியல் காங்.,கின் கலாச்சாரம்: ராகுலுக்கு அமித்ஷா பதிலடி
ADDED : செப் 25, 2017 01:53 PM

புதுடில்லி : பா.ஜ.,வின் தேசிய செயற்குழு டில்லியில் நேற்று துவங்கி நடந்து வருகிறது. நிறைவு நாளான இன்று (செப்.,25) நடக்கும் கூட்டத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது. பா.ஜ., செயற்குழு கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கூட்டத்தில் பேச துவங்கிய கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, துவக்கத்திலேயே காங்., துணைத் தலைவர் ராகுலை கடுமையாக தாக்கிப் பேசினார். அமித்ஷா பேசுகையில், அம்பானிகள், அபிஷேக் பச்சன் முதல் ஸ்டாலின், அகிலேஷ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாரிசு அரசியலுக்கு உதாரணம். இது இந்தியாவின் பாரம்பரியம் என ராகுல், நியூயார்க்கில் பேசி உள்ளார். அது காங்.,ன் கலாச்சாரம். இந்தியாவினுடையது அல்ல.
மோடி அரசு பிரிவினைவாதத்தை வளர்ப்பதாக பேசுகிறார். இந்திய அரசை பற்றி வெளிநாட்டில் சென்று விமர்சிப்பவர்கள் பற்றி கவலையில்லை. அவர்களுக்கு பா.ஜ.,வின் சாதனைகள் பதிலளிக்கும். காங்., ஆட்சியில் இருந்த போது மிகப் பெரிய ஊழல்களை பார்த்துள்ளோம். தொலைத் தொடர்பு முதல் நிலக்கரி வரை அனைத்து அரசு துறைகளிலும் ஊழல். ஆனால் பா.ஜ.,வின் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குற்றமோ, ஊழலோ கூற முடியாது என்றார்.
