தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தத்தெடுத்த கிராமம் சாதனை

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தத்தெடுத்த கிராமம் சாதனை

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தத்தெடுத்த கிராமம் சாதனை


ADDED : அக் 02, 2017 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2017 11:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜம்மு:ஜம்மு - காஷ்மீரில், மத்திய அமைச்சர், ஜிதேந்திர சிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காத பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. எம்.பி.,க்கள், தங்கள் சொந்த தொகுதியில், ஒரு கிராமத்தை தத்தெடுத்து, முன்மாதிரி கிராமமாக மாற்றும், 'சன்சத் ஆதர்ஷ் கிராம்' திட்டத்தை, 2014ல், பிரதமர் மோடி துவங்கினார்.

இதன்படி, ஜம்மு - காஷ்மீரில், தான், எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட, உதாம்பூர் தொகுதிக்கு உட்பட்ட, அம்பாலா கிராமத்தை, மத்திய இணை அமைச்சர், ஜிதேந்திர சிங் தத்தெடுத்தார். அங்கு, மத்திய, மாநில அரசு துறைகளின் சார்பில், பல்வேறு திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இது குறித்து, ஜிதேந்திர சிங் கூறியதாவது:அம்பாலா கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காத பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அம்பாலா கிராமத்தில் வங்கி, ஏ.டி.எம்., மையம், பொது சுகாதார மையம், மேல்நிலைப் பள்ளி, விளையாட்டு மைதானம், ஆம்புலன்ஸ் வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும். இதே போல், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காத மாநிலம் என்ற சாதனையை, ஜம்மு - காஷ்மீர் விரைவில் படைக்கும்.தேவிகா நதியை துாய்மைப்படுத்துவது; 3,500 கோடி ரூபாயில், சட்டர்லேகா சுரங்கப்பாதை; உதம்பூரில் உயிர் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை, பிரதமர் மோடி வழங்கி உள்ளார். மாநில மக்கள், மத்திய அரசுக்கு, மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us