நம்பிக்கையில்லா தீர்மானம் மத்திய அரசுக்கு சந்திரபாபு மிரட்டல்
நம்பிக்கையில்லா தீர்மானம் மத்திய அரசுக்கு சந்திரபாபு மிரட்டல்
UPDATED : பிப் 21, 2018 12:36 AM
ADDED : பிப் 20, 2018 08:54 PM

அமராவதி:''ஆந்திராவுக்கு நீதி கிடைக்க, மத்திய அரசு மீது, மற்ற கட்சிகளின் ஆதரவுடன், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது, கடைசி ஆயுதமாக இருக்கும்,'' என, அம்மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடு கூறினார்.
@Image@
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசிலும், தெலுங்கு தேசம் இடம் பெற்றுள்ளது.
ஆந்திர மாநில பிரிவினை மசோதாப்படி, ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, மத்திய அரசை,சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.மத்திய
நிதி
@nextcolumn@ அமைச்சர், அருண் ஜெட்லி, 2018 - 19ம் நிதியாண்டுக் கான பட்ஜெட்டை,
பிப்., 1ல் தாக்கல் செய்தார்.
இதில், ஆந்திராவுக்கான சிறப்பு நிதி
ஒதுக்கீடு பற்றி, எந்த அறிவிப்பும் இடம் பெற வில்லை. இதனால், சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்தார். இதை கண்டித்து, ஆந்திராவில் போராட்டங்கள் நடந்தன. இதன்பின், சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என, அருண் ஜெட்லி உறுதியளித்தார்.
இதற்கிடையே, மத்திய அரசு மீது, தெலுங்கு தேசம், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சியான, ஒய்.எஸ்.ஆர்.,- காங்., தலைவர்,ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
இதற்கு பதில் அளித்து, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு கூறியதாவது: மத்தியில், நரேந்திர மோடி அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, 54 எம்.பி.,க்களின் ஆதரவு தேவை; அவ்வளவு பலம், தெலுங்கு தேசத்திடம் இல்லை.
ஆந்திராவுக்கு,
மோடி அரசின் நான்காண்டு கால ஆட்சியில், எதுவும் செய்யவில்லை. @nextcolumn@ஆந்திர
மக்களுக்கு அநீதி நடப்பதை பொறுத்து கொள்ள முடியாது.மத்திய அரசு, எந்த வழியிலாவது, சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். நிதி ஒதுக்கக் கோரி தொடர்ந்து போராடுவோம்.
ஆந்திராவுக்கு நீதி கிடைக்க,அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது, கடைசி ஆயுதமாக இருக்கும். இது தொடர்பாக விவாதம் நடத்தி, மற்ற கட்சிகளின் ஆதரவை, தெலுங்கு தேசம் பெறும்.தெலுங்கு தேசம், எம்.பி.,க்கள் ராஜினாமா செய்து விட் டால்,பார்லி.,யில்,இந்த விவகாரம் பற்றி யாரும் பேச மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
