தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மோடி அரசின் தவறு: பட்டியலிட்ட மன்மோகன் சிங்

மோடி அரசின் தவறு: பட்டியலிட்ட மன்மோகன் சிங்

மோடி அரசின் தவறு: பட்டியலிட்ட மன்மோகன் சிங்


UPDATED : மே 07, 2018 01:57 PM

ADDED : மே 07, 2018 12:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 07, 2018 01:57 PM ADDED : மே 07, 2018 12:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு : பெங்களூருவில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், மோடி அரசின் பொருளாதார மேலாண்மை, வங்கி செயல்பாடு மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். சமீப காலமாக பல மாநிலங்களில் ஏற்பட்டு வரும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு, தடுக்கப்பட வேண்டியது. சர்வதேச அளவில் எண்ணெய் விலை குறைவாக இருந்தும் காரணம் இல்லாமல் இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு மற்றும் அவசர கதியில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகிய இரண்டும் மோடி அரசு தவிர்த்திருக்க வேண்டிய பெரிய தவறுகள். இந்த இரு தவறுகளால் பொருளாதாரத்தில் கடுமையான இழப்பும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. நமது சிறு, குறு உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோரை கடுமையாக பாதித்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us