கர்நாடக முதல்வருடன் கமல் சந்திப்பு; காவிரியில் நல்ல தீர்வு ஏற்படும் என்கிறார்
கர்நாடக முதல்வருடன் கமல் சந்திப்பு; காவிரியில் நல்ல தீர்வு ஏற்படும் என்கிறார்
UPDATED : ஜூன் 04, 2018 03:14 PM
ADDED : ஜூன் 04, 2018 02:02 PM

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் குமாரசாமியும், கமலும் இணைந்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் காவிரியில் நல்ல தீர்வு ஏற்படும் என்ற நம்பக்கை ஏற்பட்டுள்ளதாக கமல் தெரிவித்தார்.
கமல் கூறுகையில்: காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வருடன் பேசினேன். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினேன். முதல்வர் நல்ல திருப்தியான பதிலை அளித்தார். மக்களின் பிரதிநிதியாக வந்துள்ளேன். கலைஞனாக கூட இல்லை. மக்கள் நீதி மைய கட்சி என்பது மிக புதிது.
அரசியலை விட விவசாயிகளின் நலனே முக்கியம். தற்போதைய சந்திப்புக்கு பின்னர் ஆணைய உத்தரவுப்படி இரு மாநிலங்களும் செயல்படும் என்ற நம்பிக்கைகள் ஏற்பட்டுள்ளது. தேச நலன் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினோம்.
ரஜினியின் காலா படம் தொடர்பாக ஏதும் பேசினீர்களா என்ற கேட்டதற்கு இது குறித்து எதுவும் பேசவில்லை என்றார். திரைப்பட பிரச்சனையை விட காவிரியே மிக முக்கியம். தமிழக , கர்நாடக மக்களின் எண்ண உணர்வுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பதே முக்கியம். பரஸ்பர பேச்சு மூலமே தீர்வு காண முடியும்.
முதல்வர் பேட்டி
முதல்வர் குமாராசாமி கூறுகையில்; திரையுலகம் தனிப்பட்டது. காவிரியையும், திரைஉலகத்தையும் இணைத்து பேசக்கூடாது. காவிரி விவகாரம் இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. எதையும் பேசிதான் முடிவு எடுக்க வேண்டும். இரு மாநில விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் ஒற்றுமையாக செயல்பட்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
