உள்ளடக்கத்திற்கு செல்ல

சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு பங்கில்லை: எம்.பி., சர்ச்சை
சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு பங்கில்லை: எம்.பி., சர்ச்சை
ADDED : ஜூலை 06, 2018 08:13 PM

அ நிறம் | அளவு
மும்பை : இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என மும்பை பா.ஜ., எம்.பி., கோபால் ஷெட்டியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மலாட்டில் நடந்த முகமது நபி பிறந்த நாள் கொண்டாட்டத்தில், மும்பை வடக்கு தொகுதி பா.ஜ., எம்.பி., கோபால் ஷெட்டி கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசியதாவது: இந்திய விடுதலை போராட்டத்தில் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றிணைந்து இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்தார்கள். இதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்கள்; அந்நியர்களான அவர்களுக்கு, இந்திய விடுதலை போராட்டத்தில் சிறு பங்கு கூட இல்லை. இவ்வாறு அவர் பேசினார். அவரது இப்பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
