தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தீர்மானம் துரதிருஷ்டம் என்கிறது பா.ஜ., -தூய்மையான, வலுவான ஆட்சி என பா.ஜ., பெருமை

தீர்மானம் துரதிருஷ்டம் என்கிறது பா.ஜ., -தூய்மையான, வலுவான ஆட்சி என பா.ஜ., பெருமை

தீர்மானம் துரதிருஷ்டம் என்கிறது பா.ஜ., -தூய்மையான, வலுவான ஆட்சி என பா.ஜ., பெருமை


UPDATED : ஜூலை 20, 2018 03:55 PM

ADDED : ஜூலை 20, 2018 01:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2018 03:55 PM ADDED : ஜூலை 20, 2018 01:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை துவங்கியது. கூட்டம் துவங்கியதும், காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைவரான மல்லிகார்ஜூன் கார்கே எழுந்து பேசுகையில்; இந்த விவாதம் நாடு முழுவதும் கவனிக்கும் விஷயம் ஆகும். ஆளும் கட்சியினருக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள எதிர் கட்சியினருக்கு அவையில் பேச குறைவான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பது சரியல்ல. கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என கூறினார். இதனை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்று கொண்டார்.

ஆந்திராவுக்கு சிறப்பு என்னாச்சு ?


பிஜூ ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்.பியான ஒருவர் பேசுகையில்; ஒடிசாவுக்கு இந்த@nextcolumn@ விவாதத்தின் மூலம் எவ்வித பலனும் இல்லை என கூறி தாங்கள் வெளிநடப்பு செய்வதாக கூறினார். 18 எம்.பி.,க்கள் வெளியேறினர். தொடர்ந்து தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த ஜெயதேவ் கலா முதல் நபராக பேசினார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் காலம் தாழ்த்துவது சரியல்ல என்றார். வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் மோடியின் அரசு மக்களை ஏமாற்றுகிறது. தெலுங்கானாவுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். இவரது பேச்சுக்கு சில எம்.பி.,கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து விவாதம் நடந்து@nextcolumn@ வருகிறது.

ஊழல் இல்லாத ஆட்சி

பா.ஜ., எம்.பி., ராகேஷ்சிங் விவாதத்தில் பேசுகையில்; நாங்கள் ஆளும் கட்சியாக இருந்தும் ஏனைய கட்சிகளின் உணர்வுகளை மதிக்கிறோம். காங்கிரஸ் குடும்பத்தை தவிர மற்றவர்கள் ஆட்சியில் இருப்பதை, அக்கட்சியால் பொறுத்து கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2ஜி, காமன்வெல்த், உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நடந்தன. ஊழல்களை வெளிக்கொண்டு வந்தோம். மோடி தலைமையிலான ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. ஒரு பெரும்பான்மையான@nextcolumn@ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது துரதிருஷ்டவசமானது. கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியுள்ளோம். திறந்தவெளி கழிப்பறை இல்லாத கிராமங்களை உருவாக்கியுள்ளோம்,. ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்கி வருகிறோம். நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. வலுவான, ஊழல் இல்லாத ஆட்சி நடக்கிறது. ஏழைகள், விவசாயிகள், பெண்கள் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி உழைத்து வருகிறார். வரும் 2019 லும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

மாலை 6 மணிக்கு ஒட்டெடுப்பு

விவாதம் முடிந்த பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மாலை 6 மணிக்கு ஓட்டெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறினார். இன்றைய விவாதத்தில் சிவசனோ எம்.பி.,க்கள் பங்கேற்கவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us