ADDED : ஜூலை 27, 2018 08:35 PM

புறக்கணிப்பது ஏன்?
பட்டினிச்சாவு போன்ற சம்பவங்களை தடுக்க, ஐ.மு., கூட்டணி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை, பிரதமர் நரேந்திர மோடி அரசு, தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.சிதம்பரம்முன்னாள் மத்திய நிதி அமைச்சர், காங்.,
இணைப்பு பாலம்!
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே, இணைப்பு பாலமாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் செயல்படுகின்றனர். தடைகளை தகர்த்தெறிந்து, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பாடுபட வேண்டும்.ராம்நாத் கோவிந்த்ஜனாதிபதி
எந்த தொந்தரவும் வராது!
பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் தடுப்பு சட்டத்தால், நேர்மையான அதிகாரிகளுக்கு, புலனாய்வு அதிகாரிகள் மூலம் எந்த தொந்தரவும் வராது. அதேநேரத்தில், புலனாய்வு அதிகாரிகள் நியாயமாக நடக்க வேண்டும்.அருண் ஜெட்லிமத்திய அமைச்சர், பா.ஜ.,
