தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பண்ணை வீட்டில் சந்திரசேகர ராவ் பிரமாண்ட யாகம்

பண்ணை வீட்டில் சந்திரசேகர ராவ் பிரமாண்ட யாகம்

பண்ணை வீட்டில் சந்திரசேகர ராவ் பிரமாண்ட யாகம்


ADDED : ஜன 21, 2019 01:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2019 01:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சித்திபேட் மாவட்டத்தின் எரவல்லி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் 5 நாட்கள் நடக்கும் பிரமாண்ட யாகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

தெலுங்கானா முதல்வராக 2வது முறையாக தேர்வு செய்யப்பட்ட பிறகு சந்திரசேகர ராவ் நடத்தும் முதல் பிரம்மாண்ட யாகம் இது. இன்று (ஜன.,21) துவங்கி உள்ள இந்த பிரம்மாண்ட 'மகா ருத்ர சகித சகஸ்ர சண்டி யாகம் ' தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சமார் 200 வேத விற்பன்னர்களும், பல்வேறு மடாதிபதிகளும் பங்கேற்றுள்ளனர். இந்த பிரம்மாண்ட யாகத்தில் தெலுங்கானா கவர்னர் நரசிம்மனும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்எல்ஏ.,க்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கு முன் இத்தகைய பிரம்மாண்ட யாகம் ஒன்றை சந்திரசேகர ராவ் நடத்தினார். அதற்கு முன் 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜையும் நடத்தினார். 2015 ம் ஆண்டில் நடத்தப்பட்ட மகா சண்டி யாகத்தில் 1100 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு 10,000 முறை வேதங்கள் ஓதினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us