தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/என்னை வீழ்த்த ஒன்றிணைந்த ஊழல் வாதிகள்: மோடி

என்னை வீழ்த்த ஒன்றிணைந்த ஊழல் வாதிகள்: மோடி

என்னை வீழ்த்த ஒன்றிணைந்த ஊழல் வாதிகள்: மோடி


UPDATED : மார் 03, 2019 02:05 PM

ADDED : மார் 03, 2019 02:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 03, 2019 02:05 PM ADDED : மார் 03, 2019 02:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாட்னா: ஊழல் செய்வதில் ஒன்றிப்போகும் எதிர்கட்சியினர் தம்மை வீழ்த்தவும் ஒன்று சேர்ந்துள்ளனர் என பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.Image 2225587அவர் மேலும் பேசியதாவது: சமீபத்தில் வீரமரணம் அடைந்த நமது தியாகிகளுக்கு நான் தலைவணங்கி எனது உரையை துவக்குகிறேன். மறைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நாம் அனைவரும் ஆதரவாக இருப்போம். இந்த பீகாரில் பல்வேறு அரசியல் தலைவர்கள், தியாகிகள் உருவாகியுள்ளனர். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். Image 675413முதல்வர் நிதீஷ்குமார் பீகார் மாநிலத்தை முன்னெடுத்து செல்கிறார். வெளிப்படையான நிர்வாகம் நடக்கிறது. ஊழலற்ற நிர்வாகம் நடக்கிறது. இங்குள்ள பாட்னா நகரம் ஸ்மார்ட் சிட்டியாக மாறவுள்ளது. பீகாரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அரும்பாடுபட்டு வருகிறது. மாநிலம் அபரித வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருவது மக்கள் அறிவர். ரயில்வே, மின்சாரம், விமானம், மெட்ரோ என பல வளர்ச்சி கிட்டியுள்ளது.

கால்நடைத்தீவன ஊழல் மூலம் பலர் பயன்பெற்றனர். இந்த ஊழல் அனைத்து மக்களாலும் அறியப்பட்டது. தற்போதைய ஆட்சியில் இடைத்தரகர் இல்லை. யாரும் அரசு பணத்தை திருடவுமில்லை. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. எதிர்கட்சியினர் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் விளையாடுகின்றனர். சமீபத்திய இந்தியாவின் தாக்குதல் விஷயத்தில் நாட்டை பலவீனப்படுத்துகின்றனர். ஊழல் செய்தவர்கள் ஒன்று சேருகின்றனர். என்னை அழிக்கவும் ஒன்று சேர்ந்துள்ளனர்.Image 675414எங்கள் ஆட்சியில் 7 கோடிக்கும் மேல் இலவச சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர். விவசாயிகள் பலர் பலன் பெற்றுள்ளனர். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு உயர்ந்துள்ளது. எங்களின் இலக்கு நாட்டின் வளர்ச்சியே. இவ்வாறு மோடி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us