தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கர்நாடகாவில் ஆட்சி மாற்றமா?

கர்நாடகாவில் ஆட்சி மாற்றமா?

கர்நாடகாவில் ஆட்சி மாற்றமா?


UPDATED : மார் 13, 2019 09:32 AM

ADDED : மார் 13, 2019 09:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2019 09:32 AM ADDED : மார் 13, 2019 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : லோக்சபா தேர்தலில் 22 இடங்கள் பா.ஜ.,வுக்கு கிடைத்தால் 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம் என பா.ஜ., தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.Image 2232689கர்நாடகாவில் ஆளும் காங் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, ஆட்சியை பிடிக்க பா.ஜ., முயற்சித்து வருவதாகவும், இதற்காக தங்கள் கட்சி எம்எல்ஏ.,க்களுடன் பா.ஜ., பேரம் பேசி வருவதாகவும் காங்., தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

முதல்வர் குமாரசாமியும் பா.ஜ., பேரம் பேசியதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியை கவிழ்க்க தாங்கள் முயற்சி செய்ய மாட்டோம் என்று எடியூரப்பாவும் கூறி இருந்தார்.Image 677345இந்நிலையில் பெங்களூருவில் கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய எடியூரப்பா, வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் 22 இடங்களை எங்களுக்கு கொடுங்கள். அடுத்த 24 மணிநேரத்தில் கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம் என்றார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ.,விற்கு நிச்சயமாக 22 தொகுதிகள் கிடைக்கும் எனவும் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் லோக்சபா தேர்தலுக்கு பிறகு கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு பா.ஜ., தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us