தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இலவச அரிசி திட்டம் நிறுத்தம் : புதுவை முதல்வர் தாக்கு

இலவச அரிசி திட்டம் நிறுத்தம் : புதுவை முதல்வர் தாக்கு

இலவச அரிசி திட்டம் நிறுத்தம் : புதுவை முதல்வர் தாக்கு


ADDED : ஏப் 10, 2019 07:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2019 07:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் காங். வேட்பாளரை ஆதரித்து முதல்வர் நாராயணசாமி இன்று ( ஏப்.10) பிரசாரம் செய்தார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பாக வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து உப்பளம் தொகுதியில் முதல்வர் நாராயணசாமி இன்று (ஏப்.10) பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது : மோடியும் , கவர்னர் பேடியும் புதுச்சேரியில் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் தடுத்துவிட்டனர். இதற்கு மூல காரணம் ரங்கசாமி. இதன் காரணமாகவே கவர்னர் மாளிகை முன்பு நாங்கள் போராட்டம் நடத்தினோம். இதன் பிறகே அரிசி கிடைத்தது. ஆனால் தேர்தலை காரணம் காட்டி இலவச அரிசி விநியோகத்தையும் ரங்கசாமி தடுத்து நிறுத்தினார். மீனவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us