உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 24, 2019 02:34 PM
அ நிறம் | அளவு
இதுவரை இல்லாத வெற்றியை, பா.ஜ.,வுக்கு பெற்றுத் தந்த, பிரதமர், மோடி மற்றும் கட்சித் தலைவர், அமித் ஷாவுக்கு, பா.ஜ., நிறுவனத் தலைவர்களில் ஒருவரான, அத்வானி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு இதுவரை இல்லாத வகையில், அமோக வெற்றி பெற்றுத் தந்த, பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ., தலைவர் அமித் ஷா தலைமையில், அயராது பாடுபட்ட, கட்சித் தொண்டர்களுக்கும் என் நன்றி.நம் சிறந்த நாடு, வருங்காலத்தில் பிரகாசமான எதிர்காலத்தைப் பெற வாழ்த்துகிறேன்.இவ்வாறு, அத்வானி தெரிவித்துள்ளார்.
