தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தலைவர் பதவி வேண்டாம்: ராகுல் உறுதி

தலைவர் பதவி வேண்டாம்: ராகுல் உறுதி

தலைவர் பதவி வேண்டாம்: ராகுல் உறுதி


UPDATED : ஜூன் 20, 2019 03:29 PM

ADDED : ஜூன் 20, 2019 03:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2019 03:29 PM ADDED : ஜூன் 20, 2019 03:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த ராகுல், மூத்த தலைவர்கள் அந்த முடிவை கைவிடுமாறு வலியுறுத்தியும், தனது முடிவில் உறுதியாக உள்ளார்.Image 2302178நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கான 55 எம்.பி.,க்களை கூட பெறமுடியாமல் வெறும் 52 எம்.பி.,க்களை மட்டுமே பெற்றுள்ளது. இதனால், விரக்தியடைந்த ராகுல், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் காரிய கமிட்டி அவரது ராஜினாமை நிராகரித்தது.

தொடந்து நாடுமுழுவதும் கட்சி அமைப்புகளை மறு கட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அதற்கு ராகுல் தலைவராக தொடர வேண்டும் என்று வலியுறுத்தியது. நாடுமுழுவதிலுமிருந்தும் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து ராகுலே தலைவராக தொடரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.Image 698809இந்நிலையில், புதுடில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் ராகுல். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ''உங்களுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் தலைவர் யார்?'' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல், ''எனக்கு அடுத்தபடியாக தலைவரை கட்சியின் காரியக்கமிட்டி தான் முடிவு செய்யவேண்டும். அதுகுறித்து நான் முடிவெடுக்க முடியாது,'' என்றார்.

இதன் மூலம், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள ராகுல், அந்த முடிவில் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், 'ரபேல் குறித்து பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியது குறித்து கேட்டபோது, '' நான் ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது என்ற எனது கருத்தில் உறுதியாகத்தான் இருக்கிறேன்,'' என்று பதிலளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us