தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நாசாவுக்கு வந்ததா வேற்று கிரக தகவல்? ​

நாசாவுக்கு வந்ததா வேற்று கிரக தகவல்? ​

நாசாவுக்கு வந்ததா வேற்று கிரக தகவல்? ​


UPDATED : ஜூன் 22, 2019 09:10 PM

ADDED : ஜூன் 22, 2019 09:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2019 09:10 PM ADDED : ஜூன் 22, 2019 09:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன் ; அமெரிக்க வின்வெளி ஆய்வு மையமான நாசாவுக்கு வேற்று கிரங்களில் இருந்து 3 தகவல்கள் வந்ததாக பரபரப்பு எழுந்துள்ளது.Image 2303709

வேற்று கிரக தகவல்கள்


அமெரிக்க ஆய்வாளர்கள் சிலர், பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்று கிரகத்தில் இருந்து மூன்று விரிவான தகவல்கள் பூமிக்கு வந்துள்ளது என்கின்றனர்.

கலிபோர்னியாவில் உள்ள வேற்று கிரக நுண்ணறிவுகளை தேடும் திட்ட அமைப்பு வேற்று கிரகவாசிகள் குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை இதுவரை இல்லாத அளவுக்கு வெளியிட்டு உள்ளது.

Image 699292

நாசாவும் ரஷ்ய மையமும்


அதன் திட்ட விஞ்ஞானி டாக்டர் டேனி பிரைஸ் கூறுகையில், ''பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்று கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன.

அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையம் ஆகிய இரண்டு அமைப்புகளும் வேற்று கிரக உயிரினங்கள் அனுப்பிய தகவல்களை பெற்றுள்ளன.

விண்மீனிலிருந்து தகவல்?


கிடைத்த தகவல்கள் குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருவகின்றனர். ஆனால், அந்த தகவல்கள் குறித்து அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. மேலும், பூமியை விட்டு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து கிடைத்துள்ள சமிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது,'' என்றார்.

வேற்றுகிரக வாசிகள் குறித்த இந்த ஆய்வுகள் இதுவரை ஒரு திட்டவட்டமான முடிவினை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us