UPDATED : டிச 18, 2019 03:35 PM
ADDED : டிச 18, 2019 03:28 PM

புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மன், சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார்.
தமிழகத்தின் கோவில்பட்டி அருகே உருளைக்குடி பகுதியை சேர்ந்தவர் சோ.தர்மராஜ் என்ற சோ.தர்மன். இவர், ஈரம், தூர்வை, சோகவனம், கூகை உள்ளிட்ட 7 நாவல்களை எழுதியுள்ளார். கூகை நாவலுக்காக ஏற்கனவே தமிழக அரசின் விருதை வென்ற இவர், கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலையும், விவசாயிகளின் வேதனைகளையும் பதிவு செய்து 'சூல்' என்ற நாவலை வெளியிட்டார்.

