sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கவர்னராகிறார் இல.கணேசன்; முழு வாழ்க்கை வரலாறு

/

கவர்னராகிறார் இல.கணேசன்; முழு வாழ்க்கை வரலாறு

கவர்னராகிறார் இல.கணேசன்; முழு வாழ்க்கை வரலாறு

கவர்னராகிறார் இல.கணேசன்; முழு வாழ்க்கை வரலாறு


UPDATED : ஆக 22, 2021 01:45 PM

ADDED : ஆக 22, 2021 11:33 AM

Google News

UPDATED : ஆக 22, 2021 01:45 PM ADDED : ஆக 22, 2021 11:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மணிப்பூர் கவர்னராக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

மணிப்பூர் கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாஜ., மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

Image 876776

பெருமை

கவர்னராக நியமனம் செய்யப்பட்டது குறித்து இல.கணேசன் கூறுகையில், எனது சேவை அங்கீகரிக்கப்பட்டது குறித்து மிகவும் பெருமையாக உள்ளது. இந்தியாவில், எந்த இடத்திலும் பணிபுரிவதற்கு தயாராக உள்ளேன். எனது அனுபவம் மூலம், ஒட்டு மொத்த இந்தியாவும் ஒன்றே. இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்.சில் பணியாற்றி தொடர்ந்து பா.ஜ., தேசிய செயலர், துணைத்தலைவர், தமிழக பா.ஜ., தலைவர், ராஜ்யசபா எம்.பி.,என பதவி வகித்தவர் இல.கணேசன்.

தஞ்சையில் பிறந்தவர்


தஞ்சாவூரில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் இலக்குமிராகவன் - அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும், தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேர செயல்பாட்டாளராக பொதுவாழ்விற்கு வந்தார். இவர் தெலுங்கு பிராமண வகுப்பை சேர்த்தவர்.

இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர். 1991 இல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவை தேர்தலிலும், 2014 மக்களவை தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

தலைவர்கள் வாழ்த்து


இல.கணேசனுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் வாழ்த்து செய்தியில்

— M.K.Stalin (@mkstalin) August 22, 2021 என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us