அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டு முன்னேற்றத்தில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; அமைச்சர் பியூஷ் கோயல்
அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டு முன்னேற்றத்தில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; அமைச்சர் பியூஷ் கோயல்
ADDED : டிச 06, 2025 08:00 PM

நொய்டா: அடுத்த 25 ஆண்டுகளில், நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு முக்கியமானதாக, ஒரு வரையறுக்கப்பட்ட சகாப்தமாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறி உள்ளார்.
அமிட்டி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
மாணவர்கள் அனைவரும் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். மாணவர்களின் திறன்களை வளர்ப்பது, அவர்களை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பதை விட ஒரு பல்கலைக்கழகத்தின் சிறந்த பங்களிப்பு வேறு எதுவும் இருக்காது.
பின்தங்கிய பிரிவினரை மேம்படுத்த கல்வி இன்னும் அடித்தளமாக உள்ளது. 2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த தேசத்தை நோக்கிய பயணத்தில் இளைஞர்களின் பங்கு ஒரு சகாப்தமாக இருக்கும்.
நாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அர்ப்பணிப்புள்ள நபர்கள் தேவை. மாணவர்கள் பொறுப்புள்ள குடிமக்களாக தங்களுக்கு பிடித்ததை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தேசத்தை கட்டி எழுப்புவதில் தீவிரமாக பங்காற்றி, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பயணத்தில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
அவர்கள் எப்படி சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும் என யாரும் ஆணையிட அனுமதிக்க வேண்டாம்.
இவ்வாறு அமைச்சர் பியுஷ் கோயல் பேசினார்.

