அடுத்த 'குண்டு' வீசியது காங்கிரஸ்: ரூ.2.95 கோடி பெற்றதாக 'செபி' தலைவர் மீது 'திடுக்'
அடுத்த 'குண்டு' வீசியது காங்கிரஸ்: ரூ.2.95 கோடி பெற்றதாக 'செபி' தலைவர் மீது 'திடுக்'
ADDED : செப் 10, 2024 03:18 PM

புதுடில்லி: செபி தலைவர் மாதவி புச், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து, கன்சல்டன்சி என்ற பெயரில் 2.95 கோடி ரூபாய் வாங்கினார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் தலைவராக இருப்பவர் மாதவி புச். இவர் மீது காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
இன்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா கூறியதாவது:செபி தலைவர் மாதவி, 2016 முதல் 2024 வரையிலான காலத்தில் மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து 2.95 கோடி ரூபாய் பெற்றுள்ளார். அவரது ஆலோசகர் நிறுவனமான அகோரா அட்வைசரி நிறுவனம் மூலம் இந்த தொகை பெறப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் முடங்கி விட்டது என்று மாதவி கூறியுள்ளார். அது தவறு. அந்த நிறுவனம் செயல்படுகிறது. நிதியும் பெற்றுள்ளது. அதில் மாதவிக்கு 99 சதவீதம் பங்குகள் உள்ளன.மஹிந்திரா தவிர, டாக்டர் ரெட்டிஸ், பிடிலைட், ஐ.சி.ஐ.சி.ஐ., செம்ப்கார்ப், விசு லீசிங் உள்ளிட்ட நிறுவனங்கள், மாதவியின் அகோரா நிறுவன சேவையை பெற்றுள்ளன.
கடந்த மாதம், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் இரட்டைப்பதவி வகித்ததன் மூலம், 16.80 கோடி ரூபாய் மாதவி லாபம் அடைந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது; அதை வங்கியே மறுத்த நிலையில், இன்று மற்றொரு புதிய குற்றச்சாட்டை காங்கிரஸ் தெரிவித்துள்ளது.