ADDED : அக் 05, 2024 11:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சொந்தமான 22 இடங்களில், இன்று (அக்.,05) என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சந்தேகத்துக்கு உரிய நபர்கள் சிலர், பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்வதாக, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா, டில்லி, உத்தரபிரதேசம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில், இன்று 22 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் என கூறப்படும் முக்கிய நபர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்களை சேகரிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.