தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பஹல்காம் தாக்குதல் சம்பவம்; இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது என்ஐஏ

பஹல்காம் தாக்குதல் சம்பவம்; இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது என்ஐஏ

பஹல்காம் தாக்குதல் சம்பவம்; இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது என்ஐஏ


ADDED : டிச 15, 2025 10:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 10:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.

ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்., 22ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது.

கடந்த ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தபோது, காஷ்மீரை சேர்ந்த நபர் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து குல்காமை சேர்ந்த கட்டாரியா, 26, என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், உள்ளூர்வாசிகளான பஷீர் மற்றும் பர்வேஸ் ஜோதர் கைது செய்யப்பட்டனர்.அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

குற்றப்பத்திரிகையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவிய உள்ளூர்வாசிகள் பெயர்கள் இடம்பெறும் என என்ஐஏ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us