வரதட்சணை மரண வழக்கில் புதிய திருப்பம்: சிலிண்டர் வெடித்ததால் நிக்கிக்கு தீக்காயங்கள்!
வரதட்சணை மரண வழக்கில் புதிய திருப்பம்: சிலிண்டர் வெடித்ததால் நிக்கிக்கு தீக்காயங்கள்!
ADDED : ஆக 28, 2025 01:56 PM

லக்னோ: வரதட்சணை கேட்டு நிக்கி, 26, அவரது கணவர் விபின் பாட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த விபின் மற்றும் சகோதரர் ரோஹித். இவர்களுக்கு நிக்கி 28, அவரது சகோதரி காஞ்சன் ஆகியோருடன் 2016 டிசம்பர் 10ம் தேதி திருமணம் நடந்தது. இதில் விபின் மற்றும் அவரது குடும்பத்தினர் நிக்கியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி விபினின் சகோதரர் ரோஹித்தை மணந்த அவரது சகோதரி காஞ்சன், விபினும் அவரது தாயார் தயாவும் தன் சகோதரி நிக்கியை தீக்குளிக்கச் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நிக்கியை கொடுமைப்படுத்திய வீடியோக்களை காஞ்சன் பகிர்ந்தார். இது சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வழக்கில், தப்பிக்க முயன்ற கணவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நிக்கி பாட்டி தனது மரண வாக்குமூலத்தில், தனது மாமியார் வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டதாக டாக்டர்களிடம் கூறினார். நிக்கி அனுமதிக்கப்பட்டிருந்த போர்டிஸ் மருத்துவமனையின் டாக்டர் மற்றும் நர்ஸ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் இதை வெளிப்படுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.