ADDED : பிப் 06, 2025 11:08 PM

ஹூப்பள்ளி: ''நிதின் கட்கரி பிரதமர் ஆக வேண்டும் என்று, பா.ஜ.,வில் விவாதம் நடக்கிறது,'' என, அமைச்சர் சந்தோஷ் லாட் கூறினார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ.,வில் மூத்த தலைவர்கள், தங்கள் கருத்தை கூட கூற முடியாத மூச்சு திணறல் நிறைந்த சூழல் நிலவுகிறது. பிரதமர் மோடியிடம் பேசவே பயப்படுகின்றனர். மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் ஆக வேண்டும் என்று பா.ஜ.,வில் விவாதம் நடக்கிறது.
பிரதமர் மோடியை பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விமர்சித்து பேசுகிறார். அவரது பேச்சை ஏன் யாரும் கண்டிக்கவில்லை. அப்படியானால் அவரது பேச்சுக்கு இங்கு இருப்பவர்கள் உடன்படுகின்றனர் என்று அர்த்தம். கும்பமேளா இறப்புகள் குறித்து துல்லியமான தகவல் இல்லை.
டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 5 முதல் 10 இடங்களில் வெற்றி பெறும். மாநில கட்சிகள் வலுவாக இருக்கும் இடங்களில் நமக்கு பாதகம் இருப்பது உண்மை தான். இதற்கு காரணம் ராகுலின் கொள்கை, சித்தாந்தங்களை மக்கள் புரிந்து கொள்ளாதது தான்.
ஹிந்து என்ற வார்த்தையை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். மக்கள் வரலாற்றை படிப்பது இல்லை. இன்றைய அரசியலில் ஊடகங்கள் மூலம் பொய் பேசுவது அதிகம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

