பீஹாரில் அமைச்சர்கள் இலாகாக்கள் அறிவிப்பு: பாஜவிடம் உள்துறையை அளித்த நிதிஷ்
பீஹாரில் அமைச்சர்கள் இலாகாக்கள் அறிவிப்பு: பாஜவிடம் உள்துறையை அளித்த நிதிஷ்
ADDED : நவ 21, 2025 06:41 PM

பாட்னா; பீஹாரில் புதிய அமைச்சர்களுக்கான இலாக்காகளை முதல்வர் நிதிஷ் குமார் ஒதுக்கி உள்ளார். அதன்படி துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு உள்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
பீஹார் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பொறுப்பேற்றார். அமைச்சரவையில் யாருக்கு என்ன இலாகா என்பதை அவர் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு;
சாம்ராட் சவுத்ரி - துணை முதல்வர், உள்துறை
விஜய்குமார் சின்ஹா - துணை முதல்வர், வருவாய், நில சீர்திருத்தங்கள், சுரங்கம் மற்றும் புவியியல்
பிஜேந்திர பிரசாத் யாதவ் - நிதி, எரிசக்தி
ஷ்ரவன் குமார் - ஊரக வளர்ச்சி
அசோக் சவுத்ரி - ஊரகப்பணிகள்
லெஷி சிங் - உணவு நுகர்வோர்
மதன் சாஹ்னி - சமூக நலத்துறை
சுனில்குமார் - கல்வி
ஜமா கான் - சிறுபான்மையினர் நலத்துறை
மங்கள் பாண்டே - சுகாதாரம், சட்டம்
திலீப் ஜெய்ஸ்வால் - தொழில்துறை
நிதின் நபின் - நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி, சாலை கட்டுமானம்
ராம்கிருபால் யாதவ் - வேளாண்மை
சஞ்சய்சிங் டைகர் - தொழிலாளர் வளங்கள்
அருண்சங்கர் பிரசாத் - சுற்றுலா, கலை, கலாசாரம், இளைஞர் நலம்
சுரேந்திர மெஹதா - கால்நடை மற்றும் மீன்வளம்
நாராயண் பிரசாத் - பேரிடர் மேலாண்மை
ரமா நிஷாத் - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன்
லக்கேந்திரகுமார் பாஸ்வான் - பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினர்
ஷ்ரேயாசி சிங் - தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு
பிரமோத்குமார் சந்திரவன்ஷி - கூட்டுறவு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம்
சந்தோஷ்குமார் சுமன் - நீர்வளம்
தீபக் பிரகாஷ் - பஞ்சாயத்து ராஜ்
இந்த அமைச்சரவை பட்டியலில் உள்துறை அமைச்சகம் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. தமது 20 ஆண்டு முதல்வர் பதவியின் போது உள்துறையை தம்மிடமே வைத்திருந்த நிதிஷ்குமார் முதல்முறையாக கூட்டணி கட்சியான பாஜவுக்கு அந்த துறையை வழங்கி உள்ளார். துணை முதல்வர்களில் ஒருவரான சாம்ராட் சவுத்ரிக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

