ADDED : டிச 14, 2024 11:56 PM

பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரால் வேலைவாய்ப்புக்கான அரசு தேர்வு ஒன்றை கூட வினாத்தாள் கசிவு இல்லாமல் நடத்த முடியவில்லை. சோர்ந்து போன நிதீஷால் பீஹாரை ஆட்சி செய்ய முடியவில்லை. இந்த அரசு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனில் கொஞ்சம் கூட அக்கறையின்றி உள்ளது.
தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
ஒரே தேர்தல் நல்லது!
கடந்த 1960 வரை, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கின்றனர். நல்ல நோக்கத்துடன் இவை கொண்டு வரப்பட்டால் நாட்டுக்கு நல்லது. ஆனால் ஆட்சி மாற்றம் பிரச்னையின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிரசாந்த் கிஷோர், தலைவர், ஜன் சுராஜ் கட்சி
திசை திருப்பும் அரசியல்!
நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகளான வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றில் இருந்து மக்களை திசை திருப்பும் ஓர் ஆயுதமே, ஒரே நாடு; ஒரே தேர்தல். அதற்காகவே தற்போது இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர நினைக்கிறது. அரசியல்அமைப்பை திருத்த சிறப்பு பெரும்பான்மை தேவை.
டெரெக் ஓ பிரைன், ராஜ்யசபா எம்.பி., - திரிணமுல்