என்.எல்.சி நிறுவனத்தில் 56 பேருக்கு தொழிற்பயிற்சி: சி.ஏ., படித்தவர்களுக்கு வாய்ப்பு
என்.எல்.சி நிறுவனத்தில் 56 பேருக்கு தொழிற்பயிற்சி: சி.ஏ., படித்தவர்களுக்கு வாய்ப்பு
ADDED : செப் 28, 2024 07:25 AM

புதுடில்லி: என்எல்சி., நிறுவனத்தில் சி.ஏ., படித்த 56 பேருக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 10.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றானது என்எல்சி. நெய்வேலியில் அமைந்துள்ள இந்த நிறுவனம் வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது.
இந்நிறுவனத்தில் 56 பேர் ஓராண்டு கால தொழிற்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். பயிற்சிக்காலத்தில் மாதம் 22,000 ஸ்டைபண்ட் வழங்கப்படும்.
கல்வி தகுதி என்ன?
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை அல்லது கல்லூரியில் Chartered Accountant (CA), Cost and Management Accountant (CMA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்வது எப்படி?
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.nlcindia.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.