தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/படிவம் 6ஐ திருத்தவில்லை; தேர்தல் கமிஷன் மறுப்பு

படிவம் 6ஐ திருத்தவில்லை; தேர்தல் கமிஷன் மறுப்பு

படிவம் 6ஐ திருத்தவில்லை; தேர்தல் கமிஷன் மறுப்பு


ADDED : அக் 06, 2026 09:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2026 09:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வழங்கப்படும் படிவம் 6ல் செய்துள்ள திருத்தத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என சுப்ரீம்கோர்ட் தெரிவித்து இருந்தது; ஆனால் படிவம் 6-ஐ திருத்தவில்லை என தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான படிவம் - 6ல், இணைக்கப்பட்ட உறுதிமொழி படிவத்திற்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பில் ஒப்புதல் தெரிவித்து இருந்ததாக தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. எனினும், உரிய சட்ட விதிகள் பின்பற்றப்படாமல், 'ஆன்லைன்' எனப்படும், இணையவழியாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையில், 'படிவம் - 6ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு எந்தவித ஒப்புதலும் அளிக்கவில்லை என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், 'இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, படிவத்தில் மாற்றங்கள் செய்தது யார் என்பதை நாங்கள் பரிசீலித்து அறிய விரும்புகிறோம்'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் படிவம் 6-ஐ திருத்தவில்லை என தேர்தல் கமிஷன் மறுப்பு தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது; அந்த பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த மே மாதம் 27ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான படிவம் 6ல் இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பை சுப்ரீம்கோர்ட் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது. தீவிர திருத்தம் நடைபெறாத நேரங்களில் விதிகளின் படி விதிகளின் படி பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us