ADDED : ஜூன் 26, 2026 04:07 AM

அவசர நிலை என்பது, நம் ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். அது அமல்படுத்தப்பட்ட போது, அரசியலமைப்பின் ஆன்மாவை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காங்கிரஸ் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலைக்காக, அக்கட்சி நாட்டு மக்களிடம் இதுவரை நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவில்லை.
நிதின் நபின் தேசிய தலைவர், பா.ஜ.,
தீவிரமாக போராடும்!
எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தியும், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களை தங்கள் பக்கம் இழுத்தும், ஜனநாயக மதிப்புகளை சிதைக்க பா.ஜ., முயல்கிறது. அரசியல் தந்திரங்கள் வாயிலாக தன் நிலையை வலுப்படுத்தவும் நினைக்கிறது. அறிவிக்கப்படாத அவசரநிலை போன்ற இந்த சூழலை எதிர்த்து காங்கிரஸ் தீவிரமாக போராடும்.
கே.சி.வேணுகோபால் பொதுச்செயலர், காங்கிரஸ்
தாவ மாட்டார்கள்!
சரத் பவார் தலைமையிலான தேசிய வாத காங்.,கில் உள்ள எட்டு எம்.பி.,க்களும் கட்சி பக்கமே உள்ளனர் . எங்கள் கட்சியைச் சேர்ந்த எந்த எம்.பி.,யோ, - எம்.எல்.ஏ.,வோ எதிர் அணிக்கு தாவ மாட்டார்கள். கட்சி தாவுபவர்கள் குறித்த விபரம் இருந்தால் ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.
சுப்ரியா சுலே லோக்சபா எம்.பி., தேசியவாத காங்., சரத் பவார் அணி
