
மஹாராஷ்டிராவின் மொழி பிரச்னை பெரிய விஷயமல்ல. இந்தியா, மிகப்பெரிய நாடு என்பதால், இதுபோன்ற ஏதாவது பிரச்னை தொடர்ந்து எழும்; அதற்கான தீர்வுகளும் வெளிப்படும். வெவ்வேறு மதங்கள், ஜாதிகள், மொழிகளைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்; ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துகள் உள்ளன.
அசோக் கெலாட், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்
மாற்றத்திற்கான கூக்குரல்!
தொழிலதிபர் கொலையால், இந்தியாவின் தலைநகரமாக பீஹார் திகழ்வதை நிதிஷ் குமார் அரசு மீண்டும் நிரூபித்துள்ளது. அரசு இயந்திரம் முழுதும் செயலிழந்துள்ளது. மக்கள், இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டர். பீஹாரில் நிகழும் ஒவ்வொரு கொலையும், கொள்ளையும் மாற்றத்திற்கான கூக்குரலாக மாறும்.
ராகுல், லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
கண்ணியத்துடன் செயல்படுக!
அமெரிக்காவிடம், இந்தியா சரணடைந்துவிட்டதாக ராகுல் கூறுகிறார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக உள்ள இவர், இப்பதவிக்கான கண்ணியத்தை அறிந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற வார்த்தைகளை பாகிஸ்தான் பிரதமரோ, அந்நாட்டு ராணுவ தளபதி கூட தெரிவிக்க மாட்டர்.
சுதான்ஷு திரிவேதி, ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,

