sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனுவில் ஜாதி, மதம் கூடாது : உச்ச நீதிமன்றம் உத்தரவு

/

மனுவில் ஜாதி, மதம் கூடாது : உச்ச நீதிமன்றம் உத்தரவு

மனுவில் ஜாதி, மதம் கூடாது : உச்ச நீதிமன்றம் உத்தரவு

மனுவில் ஜாதி, மதம் கூடாது : உச்ச நீதிமன்றம் உத்தரவு

6


ADDED : ஜன 29, 2024 10:51 PM

Google News

ADDED : ஜன 29, 2024 10:51 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'நீதிமன்ற வழக்குகளில், மனுதாரர்களின் ஜாதி அல்லது மதத்தை குறிப்பிடும் நடைமுறை இனி தவிர்க்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, கணவன் - மனைவி இடையிலான சச்சரவு தொடர்பான வழக்கை, இடமாற்றம் செய்யும் மனுவை விசாரணைக்கு ஏற்ற போது, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இது குறித்து நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, அசானுதீன் அமானுல்லா அமர்வு பிறப்பித்த உத்தரவு:உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், வாதி - பிரதிவாதியின் ஜாதி அல்லது மதம் தொடர்பான விபரங்கள் இடம் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.

இதுபோன்ற நடைமுறைகள் வழக்கு விசாரணைக்கு தேவையற்றதாக நீதிமன்றம் கருதுகிறது. இனி வரும் காலங்களில், வாதி - பிரதிவாதிகளின் ஜாதி, மத விபரங்களை மனுவில் குறிப்பிடும் வழக்கத்தை நீதிமன்றங்கள் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us