UPDATED : பிப் 01, 2024 12:39 PM
ADDED : பிப் 01, 2024 12:05 PM

புதுடில்லி: ‛‛ இடைக்கால பட்ஜெட் என்பதால், வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து அவர் கூறியதாவது:
*வருமான வரி ரிட்டன்ஸ் முன்பு 90 நாட்கள் ஆகும்; ஆனால் தற்போது 10 நாட்களில் வழங்கப்படுகிறது.
*கார்ப்பரேட் வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
*இறக்குமதி வரி விகிதங்களிலும் மாற்றமில்லை
*நேரடி, மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.
*இடைக்கால பட்ஜெட் என்பதால் வருமான வரி உச்சவரம்பிலும் மாற்றமில்லை
*புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் வருமானம் வரையில் விலக்கு அளிக்கப்படுகிறது.
*வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது
*அரசின் நேரடி வரி வசூல் 3 மடங்கு அதிகரித்து உள்ளது.
*10 ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்துள்ளது.
*வருமான வரி செலுத்தும் நடைமுறை தற்போது எளிமையாக்கப்பட்டு உள்ளது.
*வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.
* ரூ.25 ஆயிரம் வரையிலான வரி தொடர்பான பழைய வழக்குகள் கைவிடப்படும்.
* பழைய வழக்குகள் கைவிடப்படுவதால் வருமான வரி செலுத்தும் ஒரு கோடி பேருக்கு பலன் கிடைக்கும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.