ADDED : டிச 16, 2025 12:01 AM

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த செயல் திட்டத்தை வகுக்க முழு சுதந்திரம் உள்ளது. 'ஓட்டு திருட்டு, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்' ஆகியவற்றை முன்னிறுத்தி, காங்., தற்போது அரசியல் செய்கிறது. இதற்கும், 'இண்டி' கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது, காங்., கட்சியின் பிரச்னை.
- ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
அவசியம் என்ன?
உலகிலேயே ஆக சிறந்த தலைவராக மஹாத்மா காந்தி போற்றப்படுகிறார். அப்படி இருக்கையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து அவரது பெயரை நீக்க வேண்டிய அவசியம் என்ன? இதில் மத்திய அரசின் நோக்கத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பெயரை மாற்றுவதால் என்ன ஆகி விடப் போகிறது?
- பிரியங்கா, லோக்சபா எம்.பி., - காங்.,
ஆட்சியை விட்டு விலகுங்க!
தேர்தல்களில் ஓட்டு திருட்டு நடக்கிறது என்பதை காங்., உண்மையாகவே நம்பினால், தெலுங்கானா, கர்நாடகாவில் இருந்து அக்கட்சி ஆட்சியில் இருந்து விலக வேண்டும். அப்போதும் இதே தேர்தல் கமிஷன் தானே சட்டசபை தேர்தலை நடத்தியது. வெற்றி பெற்றால் சிரிப்பதும், தோற்றால் புலம்புவதும் காங்., வாடிக்கையாக இருக்கிறது.
- பண்டி சஞ்சய் குமார், மத்திய அமைச்சர், பா.ஜ.,

