அதெல்லாம் முடியாதுங்க; வழக்கை ரத்து செய்யக்கோரிய பிரிஜ் பூஷனுக்கு டில்லி கோர்ட் 'குட்டு'
அதெல்லாம் முடியாதுங்க; வழக்கை ரத்து செய்யக்கோரிய பிரிஜ் பூஷனுக்கு டில்லி கோர்ட் 'குட்டு'
ADDED : ஆக 29, 2024 12:31 PM

புதுடில்லி: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது என மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு டில்லி ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், 66, மீது, மல்யுத்த வீராங்கனையர் பாலியல் புகார் தெரிவித்தனர். அவர் மீது நடவடிக்கை கோரி, தலைநகர் புதுடில்லியில், ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, புதுடில்லி போலீசார் விசாரித்து, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
ரத்து செய்ய முடியாது!
இந்நிலையில், 'தன் மீதான பாலியல் புகார்களில் உண்மை இல்லை. வழக்கை ரத்து செய்ய வேண்டும்' டில்லி ஐகோர்ட்டில் பிரிஜ் பூஷன் வழக்கு தொடர்ந்தார். இன்று (ஆகஸ்ட் 29) வழக்கை விசாரித்த நீதிபதிகள்,'பிரிஜ் பூஷன் மீதான முதல் தகவல் அறிக்கையை எப்படி ரத்து செய்ய முடியும்? உங்கள் மீதான புகார்களில் உண்மை இல்லை என ஒரு காரணமாவது கூற முடியுமா? உத்தரவு
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கை எப்படி ரத்து செய்ய முடியும்?'' என கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கு விபரங்களை செப்.,26க்குள் தாக்கல் செய்ய பிரிஜ் பூஷன் தரப்புக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.