மதமாற்றத்தில் ஈடுபட்டால்... என்.ஜி.ஓ.,க்களுக்கு எச்சரிக்கை!
மதமாற்றத்தில் ஈடுபட்டால்... என்.ஜி.ஓ.,க்களுக்கு எச்சரிக்கை!
UPDATED : நவ 12, 2024 01:35 PM
ADDED : நவ 12, 2024 10:24 AM

புதுடில்லி: 'மதமாற்றம் உட்பட அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால், என்.ஜி.ஓ.,க்களுக்கான வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டப் பதிவு ரத்து செய்யப் படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
நாட்டில் செயல்படும் பெரும்பாலான என்.ஜி.ஓ.,க்கள் எனப் படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வெளி நாடுகளில் இருந்து நிதியுதவி வருகிறது. இதை பெறுவதற்கு,
எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் வாயிலாக, அனைத்து என்.ஜி.ஒ.,க்களும் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது: சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத மாற்றத் தில் ஈடுபடுவதாகவும்,
பயங்கரவாத அமைப்பு களுடன் தொடர்பு வைத் துள்ளதாகவும், அரசுக்கு எதிரான போராட்டங் களை துாண்டுவதாகவும் புகார்கள் வருகின்றன.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடு படுவது உறுதி செய்யப் பட்டால், அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள வெளி நாட்டு நன்கொடை ஒழுங் குமுறை அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

