sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமர் மோடியை கண்டு பயமில்லை: ராகுல்

/

பிரதமர் மோடியை கண்டு பயமில்லை: ராகுல்

பிரதமர் மோடியை கண்டு பயமில்லை: ராகுல்

பிரதமர் மோடியை கண்டு பயமில்லை: ராகுல்

18


ADDED : நவ 15, 2024 04:53 PM

Google News

ADDED : நவ 15, 2024 04:53 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடா: '' பிரதமர் மோடியை கண்டு எங்களுக்கு பயமில்லை,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசினார்.

ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இரண்டாம் கட்டமாக நவ.,20ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோடா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடி அரசியல் சாசனத்தை படித்திருந்தால், அவர் வெறுப்புணர்வு, பிரிவினை ஆகியவற்றை சமூகத்தில் பரப்ப மாட்டார்.

மும்பையின் தாராவியில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பு நிலத்தை அதானியிடம் கொடுக்க முயற்சிக்கிறார். அதானிக்கு உதவ வேண்டும் என்பதற்காக, மஹாராஷ்டிராவில் காங்., கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது. பிரதமர் மோடியை கண்டு எங்களுக்கு பயமில்லை. அவர் கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாக உள்ளார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும். இவ்வாறு ராகுல் பேசினார்.

பிறகு, ஷிம்தேகா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசுகையில்,

ஏழைகளை மதிப்பதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. இந்தியாவின் முகத்தை ஜாதிவாரி கணக்கெடுப்பு மாற்றும். பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை தெளிவாக காட்டும். இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் தான் உச்சவரம்பு என்பதை அகற்றுவோம். இதற்காக பிரதமர் மோடி என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.

காத்திருப்பு


பிரசார கூட்டத்தை முடித்துக் கொண்டு கோடா நகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் கிளம்ப இருந்தார். ஆனால், ஹெலிகாப்டருக்கு கிளம்ப விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இருந்து உரிய அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அங்கு அவர் காத்து இருந்தார். சுமார் 45 நிமிடங்கள் பிறகே, ஹெலிகாப்டர் கிளம்பி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதன் பிறகு ராகுல் கிளம்பி சென்றார்.

Image 1344885

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ராகுலின் தேர்தல் பிரசாரத்தை முடக்கும் முயற்சி இது எனக்கூறியுள்ளது. மேலும், பிரதமர் மோடி தியோகார்க் நகரில் இருந்தார். இதனால் ஹெலிகாப்டர் கிளம்ப அனுமதிக்கப்படவில்லை. இது வழக்கமான நடைமுறை. ஆனால் 70 ஆண்டுகள் நாட்டை காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் எந்த எதிர்க்கட்சி தலைவருக்கும் இதுபோன்று நடந்தது இல்லை என அக்கட்சி தலைவர் ஒருவர் கூறினார்.






      Dinamalar
      Follow us